இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை பொதுச்செயலாளர்

" alt="" aria-hidden="true" />


இஸ்லாமாபாத் :

ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அந்த நாட்டின் எம்.பி.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி, இந்தியா உடனான கா‌‌ஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.


 

அவரிடம் பாகிஸ்தான் எம்.பி.க்கள், தற்போது போர் பதற்றம் நிலவுகிற சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்க முடியாது; இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐ.நா. சபை தலைமையின் பங்களிப்பு மிக முக்கியமானது என வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம், ‘‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு ஐ.நா. சபை மத்தியஸ்தரின் பங்கை வகிக்க முடியும்’’ என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

ஆனால் கா‌‌ஷ்மீர் பிரச்சினையில், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டுக்கு இடமே இல்லை, இது பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வுகாண வேண்டிய ஒன்று என்பது இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாடு ஆகும்

Popular posts
சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது
Image
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image