எய்ட்ஸ் மருந்துகள் மூலம் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க ஜப்பான் முடிவு

" alt="" aria-hidden="true" />

ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சோதனை அடிப்படையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

 

இதுகுறித்து விவரித்த  ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷி ஹைட் சுகா, எய்ட்ஸ் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கான சோதனைகளை விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

 

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 454 பேர் உட்பட ஜப்பானில் இதுவரை 520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து மருத்துவர்கள் எய்ட்ஸ்  மருந்துகளை கலந்து கொரானா பாதிப்புக்கு சிகிச்சை அளித்ததில் வெற்றி கண்டதாக தெரிவித்த நிலையில், ஜப்பானும் அந்த முயற்சியில் ஈடுபடவுள்ளது


Popular posts
சிறுபாக்கம் போலீசார் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நாடக கலை நிகழ்ச்சி நடந்தது
Image
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image