மாணவிகளை கிண்டல் செய்தவர்களை வெளுத்துவங்கிய பெண் காவலர்
உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றச் சம்பவங்களைத் தடுக்க ஆன்டி ரோமியோ படை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் வரம்பு மீறுபவர்களை கையும் களவுமாக பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பதுதான் இந்த ஆன்டி-ரோமியோ படையின் வேலை. 

 

இந்நிலையில் கான்பூரின் பிதூர் பகுதியில் நேற்று பள்ளி சென்ற மாணவிகளை, சில நபர்கள் தொந்தரவு செய்ததாக ஆன்டி ரோமியோ படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு  ஆன்டி ரோமியோ படை விரைந்தது

 

அங்கு பள்ளி செல்லும் மாணவிகளை மோசமான வார்த்தைகளால் ஒரு நபர் கிண்டல் செய்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது. அந்த நபரை, ஆன்டி ரோமியோ படையின் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் மடக்கிப் பிடித்தார். அத்துடன், தனது ஷூவை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார்.


இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாணவிகளை தொந்தரவு செய்த நபருக்கு, பெண் கான்ஸ்டபிள் சரியான தண்டனை கொடுத்திருப்பதாக பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

 

அதன்பின்னர் பிதூர் காவல் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள், அந்த பெண் கான்ஸ்டபிள் மற்றும் ஆன்டிரோமியோ படையின் மற்ற உறுப்பினர்களை பாராட்டினர். 

 

இதேபோல் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஆன்டி ரோமியோ படையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

 


Popular posts
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
Image