ரூ.25 க்கு வெங்காயம் விற்பனை - கடலூரில் போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

" alt="" aria-hidden="true" />


கடலூர்:


தமிழகம் முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வெங்காயம் விலை 100 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.


கடலூர் பான்பரி மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1 கிலோ வெங்காயம் ரூ. 25-க்கு விற்கப்பட்டது. 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என எழுதப்பட்டிருந்தது.


இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அந்த கடை உரிமையாளரிடம் மீண்டும் மீண்டும் சென்று இந்த விலை உண்மையா? நாங்களும் 100 ரூபாய் கொடுத்தால் 4 கிலோ வெங்காயம் கிடைக்குமா? என்பதனை அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டனர்.


அப்போது கடை உரிமையாளர் பலகையில் எழுதி இருப்பது போல் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆகையால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.


தகவல் கடலூர் நகர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. பலர் அந்தக் கடையும் 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய் என்ற வாசகத்தையும் செல்போனில் படம் பிடித்து அனைவருக்கும் அனுப்பி வைத்ததை பார்க்கமுடிந்தது.


காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முண்டியடித்து வெங்காயத்தை போட்டி போட்டுவாங்கி சென்றனர்.


இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் நாடு முழுவதும் வெங்காயம் கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணமாக வரலாறு காணாத அளவில் தங்கம் போல் வெங்காயம் விலை ஏறியது. இதன் காரணமாக எங்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவு வெங்காயம் வந்து கொண்டிருந்தது. மேலும் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறைந்த அளவே வெங்காயம் வாங்கி சென்றனர்.


இன்று காலை பெங்களூர் பகுதியிலிருந்து 2 லாரிகளில் 22 டன் வெங்காயம் எங்கள் கடைக்கு வந்தது. பெங்களூரில் இருந்து அனுப்பிய மொத்த வியாபாரி தெரிவித்த தொகையான 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம். பலபேர் எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, வாழ்த்தியும் செல்கின்றனர் என்றார்



Popular posts
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
Image