பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழக அரசு 2,363 கோடி ஒதுக்கீடு : ரேஷன் கார்டுக்கு 1000 அளிக்கும் திட்டம்; எடப்பாடி நாளை துவக்குகிறார்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பச்சை நிற ரே‌ஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு, பொங்கல் பணம் மற்றும் வறட்சி நிதி உள்ளிட்டவைகளை தமிழக அரசு வழங்கி வந்தது. சர்க்கரை பெறக்கூடிய குடும்ப அட்டை வைத்து இருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு உள்ளிட்ட அரசு நிதிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, சர்க்கரை கார்டுதாரர்கள் தங்கள் கார்டுகளை அரிசி பெறும் பச்சை கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக நேற்று முன்தினம் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு வழங்கியதுபோன்று இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் சுமார் 2 கோடியே 5 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள். முதல்வர் எடப்பாடி நேற்று முன்தினம் அறிவித்ததன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா நேற்று அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால்தான், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 45 நாட்கள்  இருந்தாலும் 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்  இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்தார்.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 வழங்கும் திட்டத்தை நாளை (29ம் தேதி) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தொடங்கி வைக்கிறார். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைக்க  முடியாத சூழ்நிலை ஏற்படும். அதனால் முன்கூட்டியே முதல்வர் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பொருட்கள் விவரம்

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி ஒரு கிலோ, சர்ச்சரை ஒரு கிலோ, 2 அடி நீள கரும்பு, முந்திரி 20 கிராம், ஏலக்காய் 20 கிராம், திராட்சை 5 கிராம் மற்றும் தலா 1000 என ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா நேற்று அரசாணையில் கூறி உள்ளார். அதில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 2,363 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதன்படி 1,95,05,846 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதற்காக ஒரு துணி பை 20 என கணக்கிடப்பட்டுள்ளது.


 

Popular posts
"போதையை எதிர்த்து நில்" என்னும் தலைப்பில் சமூகப்பணி துறை மாணவர் த. ரோகித் குமார் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Image
பல்வேறு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்- கிருஷ்ணகிரி
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Image
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு- திருச்சி
Image